முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செம்பருத்தி என்றால் என்ன அதன் மருத்துவ குணங்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

Subbiahpatturajan

 அழகுக்கு மட்டுமல்ல; மருத்துவக் குணத்துக்கும் செம்பருத்தி சொந்தக்காரி! 

செம்பருத்தி என்றால் என்ன அதன் மருத்துவ குணங்கள் எவ்வாறு பயன்படுத்துவது?
தமிழ் இலக்கியத்தில் செம்பரத்தை
இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நீண்ட, கருமையான கூந்தலுக்கான அடிப்படைக் காரணங்களுள் செம்பருத்தியும் ஒன்று.

செம்பருத்தி என்று ஏன் அழைக்கிறோம்

 சப்பாத்துச் செடி, ஜபம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. 
செம்மை நிறத்தில் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர். 
‘செம்பருத்தி’ என்பதற்குப் பருத்திச் செடியின் வகை என்பதை நினைவில் கொள்க

செம்பருத்தி அடையாளம்:

 பசுமை குன்றாத புதர்ச்செடி அல்லது சிறுமர வகையைச் சேர்ந்தது. 
செம்பருத்தி அடையாளம்

செம்பருத்திப் பூவின் தோற்றம்

இதய வடிவத்தில் நீண்டிருக்கும் இலைகளின் விளிம்பில் காணப்படும் வெட்டுப்பற்கள் இலைகளுக்கு அழகு. 

செம்பருத்தியின் ஆங்கில பெயர்

செம்பரத்தையின் தாவரவியல் 
பெயர் ‘ஹைபிஸ்கஸ் ரோஸா சைனென்ஸிஸ்’ (Hibiscus rosa-sinensis). ‘மால்வேசியே’ (Malvaceae) குடும்பத்திற்குள் அடங்கும். 
குவர்செடின் (Quercetin), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), கேம்பெரால் -3- சைலோசைல் குளுக்கோசைட் (Kaemperol – 3 – xylosyl glucoside), ஸ்டெர்கூலிக் அமிலம் (Sterculic acid) ஆகிய தாவர வேதிப் பொருட்கள் செம்பரத்தையில் இருக்கின்றன.

செம்பருத்தி மருத்துவப் பயன்கள்: 

பூக்களையும் இலைகளையும் உலரவைத்துப் பொடித்து, மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் அதிகப்படியான உதிரப்போக்கு குறையும். 
இதே பிரச்சினைக்கு, மாதுளம் பட்டை, செம்பரத்தைப் பட்டையைப் பொடி செய்து வைத்துக்கொண்டு மோரில் கலந்து பருகலாம். 
செம்பரத்தைப் பொடியோடு சிறிது மிளகு சேர்த்துத் தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்க, நெடுநாட்களாகத் தொடரும் 
இருமல் சட்டென நிற்கும். 
செம்பரத்தை இதழ்களோடு அத்திப் பழம், பால் சேர்த்து அடித்துச் சாறு போலப் பருக, உடற்சோர்வு உடனடியாக விலகும். 
தோசை மாவில் செம்பரத்தைப் பூ இதழ்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘மலர்-தோசை’, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவு.
உயர் ரத்தஅழுத்த நோயாளிகள் முறையான உடற்பயிற்சி, உணவு முறைகளோடு சேர்த்து செம்பரத்தை இதழ்களை மருந்தாகப் பயன்படுத்தலாம். 
இதன் பூவின் இதழ்களைப் பாலுடன் கலந்து தினமும் அருந்திவர, இதய நோய்கள் வருவதற்கு சாத்தியம் மிகவும் குறைவு.
செம்பரத்தைப் பூ இதழ், லவங்கப் பட்டை, மருதம் பட்டைப் பொடி சேர்த்து, மிதமான வெந்நீரில் கலந்து பருகிவர, பதற்றம் காரணமாக உண்டாகும் இதயப் படபடப்பு நன்கு குறையும்.
 இதன் மலர்ச் சாரங்கள் ரத்த சர்க்கரை, ரத்தத்தில் அதிகரித்திருக்கும் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதாக எலிகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 
பூஞ்சைத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் இதன் இலைகளுக்கு உண்டு. 
வலிநிவாரணி செய்கையோடு இதயத் தசைகளுக்கு வலிமை கொடுக்கும் தன்மையும் உண்டு. 
மன அழுத்த நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்குச் செம்பருத்தி நல்ல தேர்வு என்கிறது ஆய்வு. 
சில வகையான ‘பற்ப’ மருந்துகளைத் தயாரிப்பதற்குச் செம்பரத்தைப் பூச்சாறு பயன்படுகிறது.

வீட்டில் மருந்தாக பயன்படும் செம்பருத்தி பயன்கள்: 

கூந்தலைப் பராமரிக்கத் தயாரிக்கப்படும் எண்ணெய்களில், செம்பரத்தை இலை, பூவின் சாற்றைச் சேர்க்கப் பலன்கள் இரட்டிப்பாகும். 
தேங்காய் எண்ணெய்யில் செம்பரத்தைப் பூச்சாறு சம அளவு சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, தலைக்கு எண்ணெய்யாகப் பயன்படுத்தலாம். 
வெண்டைக்காயோடு, செம்பரத்தை மலர்களைச் சேர்த்து எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்துவர, பொடுகுத் தொல்லை மறையும்.

இதன் இலைகளை உலர வைத்து, தண்ணீரிலிட்டுக் காய்ச்சிய குடிநீருடன், பனைவெல்லம் சேர்த்துப் பருக, சிறுநீர் நன்றாகப் பிரியும். 
மலர்களின் உதவியுடன் செய்யப்படும் ‘செம்பரத்தை மணப்பாகு’ உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும் மருந்து. 
கோடைக் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சலுக்கான எளிமையான வீட்டு மருந்தும்கூட. 
மகரந்தக் காம்பு பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துவர, 
தாது விருத்தியாகும் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு. 
செம்பரத்தை மலர்களை வாயிலிட்டு மென்று சுவைக்க, நாப்புண் மறையும்.
நாயுருவிச் சாம்பலைத் தண்ணீரில் சேர்த்து, அதன் தெளிவுடன் செம்பரத்தைப் பூவைக் கலந்து வெயிலில் வைக்க, மருத்துவக் குணமிக்கச் சத்து கிடைக்கும். 
சிறுநீரகக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்குச் சிறப்பான மருந்து இது. 
செம்பரத்தை மலர்களோடு அதிமதுரம், ஆடாதோடை, சுக்கு, ஏலம் சேர்ந்த செம்பரத்தை – தேநீர், சுவையைக் கொடுப்பதோடு, சளி, இருமலுக்குமான மருந்தாகவும் அமையும். 
மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப் போக்குக்கு, செம்பரத்தை இதழ்களை 
வெண்ணெய்யில் வதக்கிக் கொடுக்கலாம்.
செம்பரத்தைப் பொடியைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்க, தினமும் முறையாக மலம் வெளியேறும். 
தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, வியர்வை நாற்றத்தைத் தடுக்கும். 
உடலுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடிய இந்தச் செம்பரத்தைக் குடிநீர், குளிர்ச்சியையும் தருவதால் வேனிற் கால பானமாக அதிக அளவில் பயன்படுத்தலாம்.
செம்பருத்தி… ஆரோக்கியத்துக்கான சிறந்த மருத்துவ உணவாகும் 
செம்பருத்தி மூலிகையின் 
மருத்துவ பயன்களை எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம்.மனிதர்களின் இப்படிப்பட்ட வேகமாக வாழ்க்கை முறையை கவனத்தில் கொண்டு பல இயற்கை மூலிகை பண்ணையில் தயாரித்த மருந்துகள் பயன்படுத்துதல் சிறப்பு இல்லையெனில் கிராமப் புறங்களில்  சாதாரணமாக கிடைக்கும் அரிய மூலிகை இந்த செம்பருத்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...